மல்வத்து ஓயா பல்நோக்கு திட்டத்துக்கு வட மத்திய ஆளுனர் கள விஜயம்..!
தந்திரிமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை கண்காணிக்கும் கள விஜயம் ஒன்றை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச (22) மேற்கொண்டிருந்தார்.
இதன் போது நீர் நிறப்பும் பகுதியை பார்வையிட்டதுடன் நீர் தேக்கத்தின் கீழ் பகுதியில் வனவிலங்குகள் குறிப்பாக அந்தப் பகுதியில் வாழும் யானைகள் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் நீர்த்தேக்கம் நிரம்பிய பிறகு காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் கவனம் செலுத்தினார். இது தொடர்பில் திட்ட பணிப்பாளர்க்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இக்கள விஜயத்தின் போது திட்ட பணிப்பாளர் ஏ.கிஷாந்தன் , பொறியாளர்கள் மற்றும் ஆளுநரின் இணைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
