இரு தங்கப்பதக்கம் வென்ற எம்.எல்.எம்.சப்ராஸ், பயிற்றுவிப்பாளர் ஜி.எம்.அஸ்மிர் ஆகியோருக்கு விருது..!
2024, 2025 தேசிய மட்ட விளையாட்டுபோட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வர்ண விருது வழங்கிக்கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (2025.12.23) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் ஓரியன்ட் பிட்னஸ் சென்றர் (Orient Fitness Centre) சார்பாக ஆண் கட்டழகர் போட்டியில் இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற எம்.எல்.எம்.சப்ராஸ் அவரது பயிற்றுவிப்பாளர் ஜி.எம்.அஸ்மிர் ஆகியோர் விருது மற்றும் பணப்பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விருதினைப் பெற்றமைக்காக முதலில் இறைவனுக்கும் விருதினைப்பெற்ற எம்.எல்.எம்.சப்ராஸ் அவரது பயிற்றுவிப்பாளர் ஜி.எம்.அஸ்மிர் ஆகியோருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், தற்போதைய பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், முன்னாள் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.இர்ஷாத் அலி, விளையாட்டு உத்தியோகத்தர் கே.சங்கீதா ஆகியோருக்கும் ஓரியன்ட் பிட்னஸ் சென்றர் (Orient Fitness Centre) நிலையம் சார்பாக அதன பணிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.நவாஸ் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)






