தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு
தர்கா நகர், இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், ஸாஹிரா கல்லூரி, அழுத்கம் வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலபிட்டிய வெலித்தர முஸ்லிம் மகா வித்தியாலயம், பனாப்பிட்டிய ஸேர் ராஸிக் பரீத் மகா வித்தியாலயம், வெலிப்பன்னை ரஹ்மானியா மகா வித்தியாலயம், வியங்கல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவ்வருடம் 2025 நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கிய வைபவம் டிசம்பர் 20ஆம் திகதி, தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்யாலய கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.பீ.எம். ஸுஹைர் ஜே. பி. தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பணிப்பாளர் ஹாஜியானி பாத்திமா ரினுஸியா கலந்து சிறப்பித்தார்.
மேலும், நிகழ்வில் தர்கா நகர் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து, அப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த ஓய்வுபெற்ற அதிபர் நயீம் ஆசிரியர், 45 வருடங்கள் சமூக சேவையாளராகவும், ஊடகவியலாளராகவும்,அரச சேவையில் 37வருடங்களை பூர்த்தி செய்து அண்மையில் ஓய்வு பெற்ற அல்ஹாஜ் பீ.எம். முக்தார், எழுத்தாளர்; அறிவிப்பாளர் அல்ஹாஜ் பாஸி ஸுபைர் மற்றும் நான்கு தசாப்த கால இலக்கிய பணியாற்றிய எழுத்தாளர் கவிஞர் மக்கொனை ஐயூப் கான் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முகம்மத் ரலீன் மற்றும் பாத்திமா ரம்லா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அஷ்ஸெய்க் இஸ்பஹான் ஷஹாப்தீன் நளீமி அவர்கள் கவிதை பாடினார்.
திருமதி இஸ்பஹான் ஷஹாப்தீன் மற்றும் அவரது புதல்வி ஆகியோரின் இனிமையான இஸ்லாமிய பாடல் அனைவரையும் கவர்ந்தது.
மேலும், தர்கா நகர் கிளை ஜம்மியத்துல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் நிப்ராஸ் முப்தி, மெளலவி எம். இர்ஷாத், மக்கள் வங்கி முன்னாள் முகாமையாளர் எம். இல்யாஸ், ஊடகவியலாளர் ஸஜாத், சங்க செயலாளர் இப்ராஹிம் இம்ரான் உட்பட உறுப்பினர்கள் பலரும் பங்குபற்ற, சங்க உபசெயலாளர் அறிவிப்பாளர் பாஸி ஸுபைர் நன்றி உரை வழங்கினார்.
கௌரவ அதிதிகளாக அல்ஹம்ரா அதிபர் பஸ்லியா பாஸி, ஸாகிரா ஆரம்ப பிரிவு அதிபர் எம். எச். எம். ஸக்வான், முஸ்லிம் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் ஸரூஸா, உப அதிபர் அஷ்ஷேக் பர்ஹான் நளீமி, அல்ஹம்ரா முன்னாள் உப அதிபர் பரூஸா, பாஸியத்துல் நஸ்ரியா அதிபர் மஸ்னவியா ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம கெட்டியாராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். எம். அஸ்லம், முன்னாள் இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ரூமி ஹாசிம், இலங்கை மக்கள் காங்கிரஸ் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், ஜெஸூக் அஹமத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.








(பேருவளை பீ.எம். முக்தார்)
