கல்வி மறுசீரமைப்பு, மற்றும் பாடசாலை நேர நீடிப்பு குறித்து ஆசிரிய தொழிற்சங்கங்கள் பிரதமருடன் சந்திப்பு
அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் அதற்கமைய பாடசாலை நேர மாற்றம் குறித்து பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று 2015.12.22 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதுவரை பி.ப 2.00 மணிவரை பாடசாலை நேரத்தை நீடித்தல் சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டிலிருந்த பிரதமர் இன்றைய கலந்துரையாடலில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தமை அறிய முடிந்ததாக ஆசிரிய தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்தது.
பாடசாலை நேரத்தை 2.00 மணிவரை நீடிக்காதிருக்க சுற்று நிருபம் வெளியிடப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை கல்வி அதிகாரிகள் மீளவும் பரிசீலனை செய்து முடிவுகளை விரைவாக தெரிவிக்க வேண்டும் எனவும் 2026 ஜனவரி 05 ஆம் திகதிக்கு முன்னர் இவற்றுக்கான பதிலை தரமுடியாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க பின்னிற்கப் போவதிலைலை எனவும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் இதன் போது எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


(எம்.கே.எம்.நியார்-
பதுளை)
