இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு திட்டம்; ஜெய்ஷங்கர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் , இன்று காலை ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேசியுள்ளார்.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு திட்டம் வழங்க இந்தியா அறிவித்துள்ளது.
இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்கள் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியை சந்தித்தபோது உறுதியளித்துள்ளார்.
