ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பின், கிரியேட்டிவ் எக்ஸலென்ஸ் விருது வழங்கல் விழா

“முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற நாமத்தை மையமாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பின், “கிரியேட்டிவ் எக்ஸலென்ஸ் விருது வழங்கல் விழா” கொழும்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஆர் ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் வானொலி அறிவிப்பாளருமாகிய எ.எம். இன்சாப் தலைமையில் (22) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக, சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தரும், பயிற்றுவிப்பாளருமான றஸ்மி மூஸா, சிரேஷ்ட உளவியல் ஆலோசகரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அஸ்மியாஸ் ஷஹீத், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வை.எம். நிம்ஸாத், ராம் குணா அழகுசாதன மையத்தின் பணிப்பாளர் குணரத்னம் ஹரிஷாந்த், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புலனாய்வு அலுவலர் ஜிப்ரியா இப்ராஹிம் நியூஸ்பார் தலைமை ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஸமீஹா ஸபீர், ஹாஷிம் உமர் ஃபவுண்டேஷனின் செயலாளர் மர்யம் ஹாஷிம் உமர், உளவியலாளரும், விரிவுரையாளருமான ஆயிஷா பானு ஹஸன், குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ரைஸா ரஸ்ஸாக், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் எம். கவிதா பாரதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என். தீபதர்ஷினி, ஆகியோர் மற்றும் இன்னும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதில், சுய தொழிலை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும், சிறந்த மருதாணி கலைஞர், சிறந்த கேக் வடிவமைப்பாளர், இளம் பெண்கள் சாதனை, சிறந்த ஆரி வடிவமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிறந்த ரெஸின் கலைஞர் மற்றும் சிறந்த எம்ராய்டரி வடிவமைப்பாளர் என, இவ்வாறான ஏழு பிரிவுகளில் சாதனை படைத்த பெண்களுக்கான கிரியேட்டிவ் எக்ஸலென்ஸ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில், அனைத்து மாவட்டங்களையும் மையப்படுத்தியதாக பல்வேறுபட்ட சாதனையாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் செய்தியாளர்)



