“Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
அதன்படி, Containers Transport Owners Association இனால் 15 இலட்சம் ரூபா மற்றும் Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers இனால் 13.5 இலட்சம் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டன.
இதற்கான காசோலைகள் 19 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் Containers Transport Owners Association பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் டபிள்யூ.எம்.எஸ்.கே. மஞ்சுள, திலீப் நிஹால் என்ஸ்லம் பெரேரா மற்றும் ஜயந்த கருணாதிபதி ஆகியோருடன், Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers பிரதிநிதித்துவப்படுத்தி தேஷான் ராஜபக்ஷ, சமுதிக பெரேரா மற்றும் தேவ்ஷான் ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
