வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி ஆராய ஆதம்பாவா எம்.பி கள விஜயம்
இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிசேனை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுடைய நிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பற்றி ஆராய அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா விவசாயிகளின் அழைப்பின் பேரில் நேற்று (20) சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, நீர்ப்பாசன திணைக்கள தலைமை பொறியியலாளர்கள், திணைக்கள உயரதிகாரிகள், பிரஜா சக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
