ஆலங்குடா அபிவிருத்தி உத்தியோகத்தர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆலங்குடா கிராம சேவையாளர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வியாழக்கிழமை(18) இரவு இனந்தெரியாத காடையார்களால் இரு முறை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனார்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கும் கடமையில் வியாழக்கிழமை (18) இரவு ஆலங்குடா அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை காடையர்கள் சிலர் அத்து மீறி உள்ளே நுழைந்து தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக காயமடைந்த தான் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிக்கும் ஆலங்குடா அபிவிருத்தி உத்தியோகத்தர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதியப்பட்டுள்ளதாகவும் தாக்கியவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
