இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் நிவாரண உதவி
இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா இன்று காலை இலங்கையை அடைந்தது.
குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் கொண்ட புதிய தொகுதி வந்திறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, துணை உயர் ஆணையர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்குவிடம் பொருட்களை ஒப்படைத்தார்,
இது பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தியது எனவும் இதன்போது துணை உயர் ஆணையர் தெரிவித்தார்.
