உள்நாடு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தெமட்டகொட கைரியாவின் 750 மாணவிகளுக்கு புது காலணிகள்

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளனர். என கல்லுாாி அதிபர் ஜம்மான நிசாம் தெரிவித்தார்.

நேற்று 17.12.2025 புதன்கிழமை பௌத்தம் மற்றும் சமய விவகாரம் மற்றும் கலாசார பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் மௌலபர், வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல்கள் பரிபாலன சபையின் அனுசரனையில் தெமட்ட கொடை கைரியா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தனது உடைமைகளை இழந்த 750 மாணவிகளுகளுக்கு காலணிகளை பெற்றுக் கொள்வதற்காக 1.5 மில்லியன் ரூபாவுக்கு காசோலை கல்லுாாி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் சம் சம் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது.

வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர்அல்ஹாஜ் பீர்கன்னு, றிஸ்வி மற்றும் உப தலைவர் பஸ்லான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அத்துடன்
இந் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிபர் எம். எம். நவாஸ், முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அலா அஹமட் ,
மற்றும் இந் நிகழ்வை இணைப்பாளர் முஸ்லிம் சமய திணைக்களத்தின் உத்தியோகத்தர் ரொஷான் கல்லூரியின் பிரதி அதிபர்கள் , உப அதிபர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய கைரியா மகளிர் கல்லுாாியின் அதிபர், “இம் மாணவிகள் வெல்லம்பிட்டிய ,கொலன்னாவை பிரதேசங்களில் இருந்து கடந்த இரண்டு கிழமைக்கு முன் திடீர் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மையினால் இம் மாணவர்களின் பாடசாலை புத்தகங்கள், கல்வி கற்றல் உபகரணங்கள் சீருடைகள், பாதணிகள் அனைத்தையும் இழந்து தான் இறுதியாக அணிந்திருந்த உடை உடனே உள்ளனர்.
இம் மாணவிகளை கல்லூரிகள் மீள அழைப்பதற்கு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளன.
ஆகவே இம் மாணவிகளுக்கு உடன் சீருடை வழங்க வேண்டியுள்ளது.” என அங்கு சமூகம் அளித்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் முனீர் முளப்பர், “வெள்ளவத்தை பள்ளிவாசல் கடந்த திடீர் அனர்த்தினால் பல வழிகளில் உதவி வருகின்றன. அந்த வகையில் இன்று மாணவிகளது காலனிகளுக்கு 1.5 மில்லியன் வழங்குகின்றனர். அத்துடன் கல்லூரி அதிபர் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களின் சீருடைகளுக்கான வெள்ளவத்தை பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் றிஸ்வி ஹாஜியார் மற்றும் பஸ்சால் ஆகியோர்கள் அதனை இக் கல்லுாரிக்கு வழங்குவதற்கு மீண்டும் முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *