FIFA உலகக்கிண்ண பரிசுத் தொகை அறிவிப்பு
2026ம் ஆண்டு இடம்பெறவுள்ள FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத்தொகை உலக கால்பந்து நிர்வாகக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டி 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோமற்றும் அமெரிக்காஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 50 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 727 மில்லியன் டொலர் எனவும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் முழுவதும் பங்கேற்கும் 48 அணிகளுக்கும் பணம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத் தொகை விவரங்கள் பின்வருமாறு
வெற்றியாளர்:
50 மில்லியன் டொலர்
இரண்டாம் இடம்: 33 மில்லியன் டொலர்
மூன்றாம் இடம்:29 மில்லியன் டொலர்
நான்காம் இடம்: 27 மில்லியன் டொலர்
5-8 இடங்கள்: 19 மில்லியன் டொலர்
9-16 இடங்கள்: 15 மில்லியன் டொலர்
17-32 இடங்கள்: 11 மில்லியன் டொலர்
33-48 இடங்கள்: 9 மில்லியன் டொலர்
இதற்கு முன்னதாக வெற்றியாளர்களுக்கான இந்த பரிசுத்தொகை 2022ல் 42 மில்லியன் டொலர் மற்றும் 2018இல் 38 டொலர் மில்லியன் ஆக அமைந்திருந்தது.
