உலகம்

தமிழ் நாட்டு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை விமான நிலையம் அருகே
நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல்வர் ர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஹஜ் பயணம் மேற்கள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டப்படுகிறது.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் எல்லார்க்கும் எல்லாம் என்பதே ஆகும். அரசு நிறைவேற்றும் திட்டங்கள் அனைத்தும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செயல்படுத்தி வருவது இந்த உண்மையைத் தெளிவுபடுத்தும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் போல் சிறுபான்மையின மக்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார்கள்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று அறிவித்திருந்தார்கள்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில்
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா 16.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலத் துறை அமைச்சர் ஆவடி நாசர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் முருகனாந்தம்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் சித்திக், அரசு செயலாளர் சரவணவேல் ராஜ், அமைச்சர் தமோ. அன்பரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மனித நேய கட்சித் தவைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், ஆளூர் ஷாநவாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் இறையன்பு குத்தூஸ், அயலக நல வாரிய உறுப்பினர் எஸ். எஸ். மீரான், திருப்பூர் அலஅதாப், ஹஜ் கமிட்டி உறுப்பினர் பாத்திமா முஸ்ஸபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை எம். எம். அப்துல்லா, வக்பு வாரிய உறுப்பினர்கள் டாக்டர் சுபேர் கான், முஹம்மது பஷீர், வழக்கறிஞர் நவாஸ், அப்போலோ அனீபா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, திமுக தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா, பெருமக்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டார்கள்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது :
தமிழ்நாடு ஹஜ் இல்லம் – மார்ச் 3 அன்று அறிவித்தேன்; இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன்! விரைந்து பணிகளை முடித்துத் திறந்து வைப்போம்! இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *