கற்பிட்டி பிரதேசத்தில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 25.324 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.என்.எம். சிபாஸ் தெரிவித்துள்ளார்.
கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினியின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்கின்றது.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் கரம்பை கிராம சேவையாளர் பிரிவில் 3458 குடும்பங்களுக்கும், நுரைச்சோலை – 2182 , மண்டலக்குடா – 1957, முதலைபாளி – 1637 , ஆலங்குடா – 1525, கண்டக்குழி – 1317, பள்ளிவாசல்துறை – 913, ஏத்தாளை – 891, மாம்புரி – 860, வன்னிமுந்தல் – 795, குறிஞ்சிப்பிட்டி வடக்கு – 750, திகழி – 750, நாவக்காடு – 670, புதுக்குடியிருப்பு – 663, பாலக்குடா – 630, பனையடி – 621, செத்தாப்போளை – 571, குறிஞ்சிப்பிட்டி தெற்கு – 565, நிர்மலபுர – 503, ஆனவாசல் -472, பெரியகுடியிருப்பு – 468, டச்பே – 434 முசல்பிட்டி – 420, ஆன்டாங்கனி – 414, தலவில் கிழக்கு – 401, நரக்களி – 389, தலவில் மேற்கு – 353, தழுவை 286, பள்ளியாவத்தை – 185, கண்டக்குழி குடா – 144, சின்னக்குடியிருப்பு – 100 என்ற அடிப்படையில் உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது எனவும்
ஒருவர் உள்ள குடும்பத்திற்கு 2100/- பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 1418 பொதிகளும் இருவர் உள்ள குடும்பத்திற்கு 4200/- பெறுமதியான 3273 பொதிகளும் மூவர் உள்ள குடும்பத்திற்கு 6300/- பெறுமதியான 5900 பொதிகளும் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 8400/- பெறுமதியான 7691 பொதிகளும் ஐந்து பேர் மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பத்திற்கு 10500/- பெறுமதியான 7042 பொதிகளுமாக கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 31 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் 25 324 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
