அமெரிக்காவினுள் நுழைய 7 நாட்டவர்களுக்கு தடை
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரியா,புர்கினா பாசோ,மாலி,நைஜர்,தென் சூடான்,லாவோஸ்,சியரா லியோன்ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அதன்படி இந்த 7 நாடுகளுக்கான தடை உத்தரவு எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
