கபீர் ஹாசீம் வழிகாட்டலில் அனர்த்த உதவிகள்
அண்மையில் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை அரனாயக்கா, கோவிலகந்த மற்றும் கடுகன்னாவை பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு 2025.12.04 ஆம் திகதி மூன்று நேரங்களுக்கும் சமைத்த உணவு வழங்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பதி, வெளிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஆகியோர் தலைமையிலான 80 இளைஞர்களைக் கொண்ட குழுவினர் மாவனல்லைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாஷிமின் வழிகாட்டலில் இந்த சிறப்பான பணியை மேற்கொண்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு வழங்கவென பாடசாலை உபகரணங்கள் தொகுதியொன்
றையும் பா. உறுப்பினர் கபீர் ஹாஷிமிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.
(அமீர் ஹூசைன்)
