ஏ.எம். தாஜுதினுக்கான பணி நயப்பு விழா
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில் கல்விக் கோட்டத்தில் ஆரம்பக் கல்விப் பிரிவின் இணைப்பாளர் கடமையாற்றிய ஏ.எம். தாஜுதினுக்கான பணி நயப்பு விழா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று (16)இடம் பெற்றது
வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பீ.டி.சீ.ரீ முகாமையாளர், விரிவுரையாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டு
பணி நயப்பு பெற்ற ஏ.எம். தாஜுதினின் சேவையினை பாராட்டி பொன்னாடை, மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவித்தனர்.



(றிபாஸ்)
