அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை நிறுத்தம்
உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு குறித்த வைத்தியசாலை வளாகத்தில் சில வெற்றுத் தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதனால் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல்கள் எழுந்துள்ளதுள்ளதால் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
