மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு மீண்டும் ஆரம்பித்து வைப்பு
மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மீண்டும் நேற்று (15.12.2025) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வியா சஜ்ஜாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பேராசிரியரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எம்.திருக்குமார், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக், ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எச்.நுபைர், சபை உறுப்பினர்களான கே.பி.எஸ்.ஹமீட், எம்.பாஹிர் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு இயங்கி வந்த நிலையில் ஆளனிப்பற்றாக்குறை காரணமாகவும் மகப்பேற்று பிரிவின் இயந்திரங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இயங்காமலிருந்த நிலையில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வியா சஜ்ஜாத் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் முயற்சினால் மீண்டும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.







(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
