பொத்துவில்லில் நுளம்பிற்கு புகை விசிறும் நடவடிக்கை ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீளவும் திறக்கப்பட்டதை முன்னிட்டு
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் வழிகாட்டலின் கீழ் புகை விசிறும் நடவடிக்கைகள் நேற்று (15) மேற்கொள்ளப்பட்டன.
பொத்துவில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களும், நுளம்புக்கட்டுப்பாட்டு உதவியாளர்களும் இணைந்து
நுளம்புத் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகளின் சுற்றுச்சூழல்கள் துப்பரவு செய்யப்பட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும்
புகை விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.




(றிபாஸ்)
