மூச்சு வேலைத் திட்டத்தின் கீழ் தம்பதெனிய வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள்
டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தம்பதெனிய பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பதெனிய ஆதார வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. Patient Monitor 5 ம், Syringe pump 2 ம் நேற்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்காலத்திலும் மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைக் கட்டமைப்புகளை மீள கட்டியெழுப்பும் முகமாக இவ்வாறான நன்கொடைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.








