ஐ.பி.எல்- 2026; மினி ஏலம் இன்று
2026ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு மினி ஏலம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் 10 அணிகளும் இந்திய மதிப்பில் 237.55 கோடி ரூபாவுடன் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளன.
மொத்தம் 359 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வதுடன், அதிகபட்சமாக 10 அணிகளும் மொத்தம் 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
இந்த ஏலத்தில் அதிகூடிய தொகையாக 64.3 கோடி ரூபாவுடன் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி கலந்துகொள்கின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2.75 கோடியுடன் மிகச்சிறிய தொகையுடன் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளது.
கொல்கத்தா அணிக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 43.40 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.
இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கேமரூன் கிரீன் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.
அவர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும் இந்த ஏலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
