நாவலப்பிட்டி – கண்டி வீதி மீளத்திறப்பு
அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி வீதி இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கடந்த 18 நாட்களாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளின் பின்னரே, வீதியை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
