சிட்னி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; ஜனாதிபதி அநுர கண்டனம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது.
அவுஸ்திரேலிய மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒற்றுமையுடன் உடன் நிற்கிறது. மேலும் வன்முறை மற்றும் வெறுப்புக்கு எங்கள் சமூகங்களில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்’
