சஜித் பிரேமதாச தலைமையில் கம்பளையில் நடைபெற்ற அனர்த்த ஆலோசனைக் கூட்டம்
டித்வா சூறாவளிப் புயலால் எழுந்த வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேசத்தில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான தேவை மதிப்பீட்டுகளை (Need Assessment) ஆராயும் நோக்கிலான ஆலோசனைக்கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(14) கம்பளை நகர சபை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரியெல்ல,
எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







