கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்
பொலன்னறுவை வெலிகந்த கினிதமனவில் இருந்து வெலிகந்த நகருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இசட் டி பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து (13) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் பெண் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
