கற்பிட்டி பிரதேச செயலகத்தில் அரசின் அனர்த்த நிவாரண நிதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பம்
டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவித்திட்டம் வழங்கும் நடவடிக்கைகள் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்
கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி தலைமையின் கீழ் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 8743 குடும்பங்கள் மேற்படி அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான அரசின் நிவாரண நிதி உதவி வழங்களின் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மூன்று வகுப்பினராக இனம் காணப்பட்டு இந்த 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகின்றது
அதன்படி முழுமையாக வீடு பாதிக்கப்பட்டவர்கள், பகுதியளவில் வீடு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ள நீரில் மூழ்கியவர்கள் என்ற அடிப்படையில் அரசின் உதவிப் பணம் வழங்கப்படுவதாகவும் இதற்கான முதற்கட்ட நிதி உதவிப் பணம் 59 இலட்சம் கிடைக்கப்பெற்றுள்மையும் குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
