உள்நாடு

பாலாவி – நாகவில்லு புஹாரிய்யா அரபுக் கல்லூரிக்கு 2026 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி..!

புத்தளம் – பாலாவி, நாகவில்லு பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயங்கி வரும் புஹாரிய்யா அரபுக் கல்லூரிக்கு 2026ம் புதிய கல்வி ஆண்டு ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை டிசம்பர் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஹிப்ழ் (அல்குர்ஆன் மனனம்) பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அல்குர்ஆனை பார்த்து சரளமாகவும், திருத்தமாகவும் ஓதக் கூடியவராகவும், 11 – 13 வயதுக்கு இடைப்பட்டவராகவும், கல்வி கற்றலில் சுய விருப்பமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஷரீஆ பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அல்குர்ஆனை பார்த்து சரளமாகவும், திருத்தமாகவும் ஓதக் கூடியவராகவும், 13 – 15 வயதுக்கு இடைப்பட்டவராகவும், கல்வி கற்றலில் சுய விருப்பமுள்ளவராகவும் , தேகாரோக்கியமுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், அரபு, உருது, ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழிகளை கற்பித்துக் கொடுக்கப்படுவதுடன், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களை பெறுவதற்கான வழிகள் செய்து கொடுக்கப்படும்.

மேற்படி ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் நேர்முகப் பரீட்சை தினத்தன்று தமது பிறப்புச் சான்றிதழ் மற்றும் தாம் கல்வி பயிலும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை என்பவற்றை எடுத்து வருக்க தருமாறு புஹாரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு 0718603256, 076 7690766, 0322269450 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.

கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல்:
https://www.facebook.com/share/1EVbjjyVRZ/

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *