மாத்தளை நகர்வாழ் தமிழ் முஸ்லிம் பெளத்த சமூகத்தை சேர்ந்த அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானம் முகாம்..!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தத்தினால் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களின் நலன் கருதி இரத்த தானம் முகாம் ஒன்று மாத்தளை முஸ்லிம் ரீடிங் ரூம் மண்டபத்தில் இடம்பெற்றது. மாத்தளை Y.M.M.A மற்றும் மாத்தளை நகர்வாழ் தமிழ் முஸ்லிம் பெளத்த சமூகத்தை சேர்ந்த அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. இதன் போது சுமார் 100பேர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் மாத்தளை பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் வேரகம தலைமையிலான வைத்தியர்கள் குழு ஒன்று இதில் கலந்து கொண்டது இதன் போது முன்னாள் அமைச்சர் நந்தமித்ர ஏக நாயக உட்பட வைத்தியர்கள் ஏற்பாட்டு குழுவினரையும் படத்தில் காணலாம்.
(மாத்தளை எம்.சதூர்தீன்)




