உள்நாடு

புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசின் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை..!

புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை வழங்கியுள்ளார்.

புத்தளத்திற்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமைச்சர் தள வைத்தியசாலை முழுவதும் சுற்றிப்பார்த்துடன் குறைபாடுகள் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் மேலும் வளங்களின் பற்றாக்குறையையும் அறிந்துகொண்டார்.

வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக உடனடி நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசின் மேலாண்மைக்குள் கொண்டு வந்து மேம்பட்ட வசதிகள், நிபுணர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதாகவும்அவர் தெரிவித்தார்.

சுகாதார பணிப்பாளருக்கு புத்தளம் தள வைத்தியசாலையை உடனடியாக மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

இந்நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபை முதல்வர் ரின்ஷாட் அஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இத்தொடர்பான அனைத்து தகவல்களையும் மாகாண ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளைக் கையாளுமாறும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *