பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகரும், சமூக செயற்பாட்டாளருமான வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் வேண்டுகோளுக்கினங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்,எம். ஏ.தாஹிரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பலாஹ் தையல் பயிற்சி நிலையத்தின் தலைவரும், முன்னாள் பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான தாஜூதீன் தலைமையில், இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எம். ஏ.சீ. அஹமட் நஷீல், பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.




(றிபாஸ்)
