புத்தளம் மாநகர சபையின் முதலாவது வரவு செலவு திட்டம் தோல்வி
புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சபையில் முதல் மேயர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ள அனைத்து குறைகளும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் தெளிவாக சபையிலே எடுத்துரைக்கப்பட்டது.
அதன் பின்பு வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. புத்தளம் மாநகர சபையின் 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை தேசிய மக்கள் சக்தியின் 7 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியின் 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்து தோற்கடித்தார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முர்ஷித் மாத்திரம் நடுநிலைவகித்திருந்தார்.
புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாக #CleanPuttalam போராட்டம், புத்தளம் தள வைத்தியசாலையின் தரம் மற்றும் ஒழுங்கில்லாத வரவு செலவு திட்டம் ஆகியவையே காரணம் என்று சபையின் எதிர்க்கட்சி தலைவர் இஷாம் மரிக்கார் குறிப்பிட்டார்.
சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சபையின் சுயேட்சை உறுப்பினரையும் ஒன்றுபடுத்தி, ஒரே கருத்தின் கீழ் வாக்களிக்க வைக்கும் பணியை Clean Nation தலைவர் முன்னின்று வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தூயதேச கட்சியினுடைய ஊடகப் பிரிவு)
