உள்நாடு

நிவாரண பணிக்கு நிதி உதவி சேகரித்து வழங்கிய புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள்

புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்களின் உயரிய மனிதாபிமானத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி புத்தளம் நிவாரண சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு (Disaster Management Centre, Puttalam ) வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மக்கள் முகம் கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கு உதவும் முகமாக புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிதி புத்தளம் நிவாரண சேகரிப்பு மத்திய நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் மாநகர சபை என்பவற்றின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டதே புத்தளம் (Disaster Management Centre) DMC ஆகும்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *