அனர்த்த நிவாரணப் பணி; ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையிலான குழுவினர் கம்பளை விஜயம்
அண்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை நகரின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேற்று (9) கம்பளை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.
இக்குழுவில், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச் அஸ்பர் J.P, ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ் நழீம், கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் இணைந்துகொண்டனர்.




