இம் மாதம் 16ல் பாடசாலைகள் மீளத் திறப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளில் அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலைமையுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டிசம்பர் 16 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15 ஆம் திகதி கடமைக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நெகிழ்வான ஆடைக் கொள்கை பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
