ரிவஸ்டன், நக்கில்ஸ் மலைப் பிரதேசங்களை பார்வையிடுவதற்கு தடை
கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாரிய மண் சரிவுகள் ஏற்பட்டு பாதிப்புக்குள்யிருக்கும் ரிவஸ்டன் மற்றும் உலக மரபுரிமைக்குள்வாங்கப்பட்டுள்ள நக்கில்ஸ் மலை அடிவாரங்களை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தடைசெய்துள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க தெரிவிக்கிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக மேற்படி பகுதிகளுக்கு உட்புகும் பாதைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் இப் பகுதியில் சில பகுதிகளில் இன்னும் அவதானமிக்க நிலைமைகள் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் சுற்றிக்காட்டுகின்றார்.
விசேடமாக இப்பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை தற்பொழுது மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலா பயிணிகள் பொது மக்கள் இப்பகுதியினை பார்வையிடச் செல்வது அவர்களின் பாதுகாப்புக்கு உகந்ததில்லை எனவும், இது அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரச அதிகாரிகளுக்கு பெரும் இடைஞ்சலாகும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
விசேடமாக ரிவஸ்டன் மற்றும் நக்கில்ஸ் மலைகள் உலக புகழ்பெற்ற மலையடிவாரங்கள் எனவும் மாத்தளை மாவட்டங்களுக்கு அழகை எடுத்துக்காட்டக்கூடிய இயற்கை வனபகுதிகளாகவும் இயற்கை அழநிறைந்ததாகவும் தேசிய மட்டும் சர்வதேச சுற்றுலாபயணிகளின் மனசுகளை கவரக்கூடிய மலை அடிவாரங்களாக இருப்பதால் இயற்கை அனர்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மலையடிவாரங்களையும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் பணிப்புறைக்கு அமைய அவசர அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாத்தளை மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(M.S.M. மசாஹிம்)
