அனர்த்த நிவாரண பணிகளுக்காக பிரதமரிடம் 25 கோடி ரூபாயை கையளித்த சந்திரிக்கா
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது. மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினால் அதற்குரிய காசோலை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
