பூட்டான் இலங்கைக்கு நிவாரண உதவி
கடுமையான வானிலை தொடர்பான பேரழிவுகளிலிருந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக பூட்டான் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 200,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
பூட்டானின் தூதுவர் கர்மா ஹமு டோர்ஜி இனால் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் திடம் உத்தியோகபூர்வமாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.
