இம்மாத இறுதிக்குள் பொதுப் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்னாயக்க
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நூறு வீதம் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சிரமம் என்றாலும், ஏறக்குறைய அனைத்து வீதிகளிலும் பேருந்து சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பித்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான பெருமளவிலான பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
