உள்நாடு

பெரும்போக செய்கையை அவசரமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெள்ளத்தால் அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த நெற். செய்கையை மீண்டும் பெரும் போகத்தில் செய்வதற்கு அவசரமாக தயார் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசியத் தேவையாக கருதி அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் இதை உறுதி செய்து நன்கு ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் தற்காலிக பழுது பார்ப்பதுகள் மூலம் தேவையான நீர்ப்பாசன நீரை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.

நாட்டின் வரலாற்றில் பயிர்ச் செய்கைக்கு அதிக இழப்பீடு வழங்குவதன் மூலம் நெற் செய்கை நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்க அரசாங்கம் எதிர் பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் செயல்படுத்தப்பட திட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்வதற்காக (07) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்தால் மொத்தமாக இழப்புகளை சந்தித்த விவசாயிகளின் எண்ணிக்கை விவசாய நிலங்களின் அளவு மற்றும் தேவையான நிதி அளவு குறித்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை க்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். உரிய இழப்பீடு நியாயமான முறையில் பெறப்பட வேண்டும் என்றும் யாரும் அதனை நியாயமற்ற முறையில் பெறக்கூடாது என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு இழப்பீடு நிரந்தர அடிப்படையில் உறுதி செய்யவும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் அவர்களை மீண்டும் நெற் செய்கையினை தொடங்க ஊக்குவிக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாவட்டத்தில் வீதி , மின்சாரம் , நீர் வழங்கல், நீர்ப் பாசனம் தகவல் தொடர்பாடல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தனித்தனியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கேட்டறிந்து கொண்டார்.

தடைப்பட்ட வீதிகளை மீண்டும் திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி தற்காலிகமாக பழுது பார்ப்பு பணிகளை விரைவுபடுத்தி வீதி மேம்பாட்டுக்கான நிரந்தர திட்டங்களை செயல்படுத்தும் வரை மக்களின் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

பேரிடர் காரணமாக மாவட்டத்தில் உள்ள 580 மின்பிறப்பாக்கிகளில் 473 மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் அவை தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் மின்சார விநியோகம் இன்று முடிக்கப்படலாம் என்றும் மின்சார ஆணையம் தெரிவித்தது.

மேலும் 49,000 நீர் விநியோகம் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றில் சுமார் 99 ‘/. மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீதமுள்ள தொகைக்கு பவுலர்கள் மூலம் தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.சேதமுற்ற சமுக நீர் வழங்கல் திட்டங்கள் தற்போது மீண்டும் சீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கிணறு சுத்தம் செய்தல் பணிகள் தற்போது கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் பிரதேச செயலகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சமூக பங்களிப்புகளுடன் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 228 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீடுகள் இருந்த அதே இடத்தில் மீள்குடியேற்றப்படுவார்களா அல்லது பொது இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்களா என்பவற்றை தீர்மானிக்கவும் தொடர்புடைய நிலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்பாகவும் துல்லியமான தரவுகளை சேகரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

டிசம்பர் 16 ஆம் திகதி க்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளை யும் திறக்க முடியும் என்று கல்வி அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு திரை சேரியில் இருந்து வழங்கப்படவுள்ள ரூ 15,000 நிதியை டிசம்பர் 31 ம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவும் அதற்கான பெயர் பட்டியலை உடனடியாகத் தயாரிக்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரச அதிகாரிகள் பொலிசார் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆற்றிய பங்கிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *