கிண்ணியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலேசிய தூதரகத்தின் நிவாரண உதவி..!
கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்டவவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா தூதரகத்தின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) நடைபெற்றது.
செரண்டிப் பௌண்டேசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜமால்தீன் முகமட் அமானுள்ளா ஆசிரியர் நேரில் பங்கேற்று நிவாரணப் பொருட்களை தேவையுள்ள குடும்பங்களுக்கு வழங்கினார்.
கிண்ணியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் சிரமத்தில் இருக்கும் பல குடும்பங்களுக்கு இவ்வுதவி பெரும் நம்பிக்கையாக அமைந்துள்ளது. உள்ளூர் சமூக தலைவர்களும் பொதுமக்களும் இத்தகைய மனிதாபிமானச் செயலை பாராட்டியுள்ளனர்.
