பேரிடர் நிவாரணம் மக்களிடம்: மினுவாங்கொடை கல்லொழுவை பகுதியில் 25,000 ரூபாய் உதவி வழங்கல் தொடங்கியது
மினுவாங்கொடை கல்லொழுவை பகுதிகளில் அண்மைய வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் மூலம் அடையாளம் கண்டறிந்து, ஒவ்வொரு குடும்பமும் நியாயமான சீராய்வு செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதி அறிவித்த 25,000 ரூபாய் சிறப்பு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை சுத்தம் செய்வதை எளிதாக்கும் நோக்கில் வழங்கப்படும் இந்த நிதி, உரிய பட்டியல் மற்றும் அதிகாரப்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் கல்லொழுவை மக்களிடம் சென்றடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் துயரத்திலிருந்து மீண்டு எழும் மக்கள் வாழ்வுக்கு உடனடி உதவியாக இந்த நிவாரணம் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(ஏ .சி. பௌசுல் அலிம்)
