ஏழு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
அதன்படி கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறந்தே உள்ளன.
பொல்கொல்ல, ரந்தம்பே மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களில் தலா ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும், போவதென்ன நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்ததனால் எந்த ஆபத்தும் இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
