உள்நாடு

மாத்தளை மாவட்டத்தில் 20 பேர் பலி

மலையகத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் 2905 குடும்பங்களைச் சேர்ந்த 10 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இம்மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்து உள்ளதாக மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சமிந்த அமர வீர தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக 24 வீடுகளும் பகுதி அளவில் 46 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் 47 இடைத்தங்கல் முகாம்ங்களில் தங்கியுள்ளனர் இம் மாவட்டத்தில் இந்த அனர்த்தங்களின் மூலம் இதுவரை 20 பேர் உயிரிழந்து உள்ளதுடன், பத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யடவத்த பிரதேச செயலாளர் பிரிவில் செலகம பகுதியில் வீடோன்றின் மீது மண் மேடை சரிந்து விழ்ந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை முதல் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று வரை பல பிரதேசங்களுக்கு மின்சாரம் இன்றி இப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் மரங்கள் மண்மேடுகள் பாதைகளில் ஆங்காங்கே விழுந்து காணப்படுகின்றது மின் கட்டமைப்பில் மின்கம்பங்கள் மின்கம்பிகள் பல பகுதிகளில் உடைந்து விழுந்துள்ளதோடு இம்மாவட்டத்தில் 36 வீதிகளும் நான்கு பாலங்கள் முற்றாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா தலமாக காணப்படும் ரிவஸ்டன் பகுதிக்கு இரத்தோட்டை ஊடாக செல்லும் வீதி முற்றாக சேதம் அடைந்துள்ளது இதனால் இப்பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது மாத்தளை கண்டி ரயில் வீதியில் பல இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(மாத்தளை எம். சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *