பதுளை ஜும்ஆ பள்ளியினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி..!
பதுளை மாநகர எல்லைக்குட்பட்ட பதுளுபிடிய,கைலகொட,புவக்கொடமுல்ல,சிங்ஹபுற,அமுனுவல்பிடிய,கனுபெலல்ல,அந்தெனிய ஆகிய பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிங்கள,முஸ்லிம் தமிழ் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்காக நிவாரண உதவியாக ஒரு தொகை பணம்,மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சுமார் ஒன்பது மில்லியன் பெறுமதியான பொருட்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் இதற்கான நிதியுதவியினை பதுளை பைத்துஸ்ஸகாத் நிதியம்,பைத்துல்மால் நிதியம்,மற்றும் முஸ்லிம் தனவந்தர்கள் ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் பதுளை மாநகர மேயர் நந்தன ஹபுகொட,ஊவா மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திரு லக்சிரி அவர்களும்,பதுளை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி திரு சானக அவர்களும்,பிஸொப் ஜூட் மிஸான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளை பதுளை மஸ்ஜிதுல் அன்வர் ஜும்ஆ பள்ளி நம்பிக்கையாளர் சபை தலைவர்அல்ஹாஜ் இம்டியாஸ் பகீர்டீன் உட்பட ஏனைய உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக ஏறபாடு செய்திருந்தனர்.
(எம்.கே.எம்.நியார் – பதுளை)




