கண்டியில் உயிரிழந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு..!
கண்டி, உடத்தவ, நெலும்மல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர் 27ஆம் திகதியன்று பெய்த கன மழையின் காரணமாக பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்தது.
இது சுமார் 5 கிலோமீட்டர் வரையில் பரவி, முழு கிராமத்தையும் பாதித்தது.
இந்நிலையில் உயிரிழந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று (02) இடம்பெற்றுள்ளன.
