மரக்கறி பற்றாக்குறையால் மக்கள் அவதி..!
மழை மற்றும் மண்சரிவு காரணமாக மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 முதல் 1000ரூபாவுக்கும் லீக்ஸ், போஞ்சு ஆகியன 500 முதல் 800 ரூபாவுக்கும் வட்டக்காய் 100 முதல் 130 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
