களனி கங்கை நீர்மட்டம் உயர்வு..! அருகிலுள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுரை..!
களனி – தொடர்ச்சியான மழையினால் களனி கங்கையின் வலது கரையில் அமைந்த வெள்ள பாதுகாப்பு அணையை அண்மித்த பகுதிகளில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் பாதுகாப்பு எல்லைக்கு மிக அருகில் சென்றுள்ளதால், சூழ்நிலை மேலும் மோசமடையக் கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணையைச் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும், தேவையற்ற ஆபத்துகளை தவிர்க்க கவனமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
