கலாவெவயில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு..!
அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று(01) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காணாமல் போயிருந்தார்.
தற்போது துரதிஸ்டவசமாக அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
