ஓட்டமாவடியில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு..!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ஓட்டமாவடியில் உலருணவு சேகரிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஓட்டமாவடி வர்த்தக சங்கம் மற்றும் கிழக்கு சமூக நலன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த பணியினை இன்று திங்கட்கிழமை (1) முன்னெடுத்துள்ளனர்.
ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் தங்களால் முடியுமான உலருணவுகளை வழங்கி வைக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)


